சுசீந்திரம் தாணுமாலயன்  சுவாமி கோவிலில் கும்பாபிஷக  திருப்பணிகள்

சுசீந்திரம் தாணுமாலயன்  சுவாமி கோவிலில் கும்பாபிஷக  திருப்பணிகள்

சுசீந்திரம் தாணுமாலயன்  சுவாமி கோவிலில் கும்பாபிஷக  திருப்பணிகள் பூஜையுடன் துவங்கியது.

சுசீந்திரம் தாணுமாலயன்  சுவாமி கோவிலில் கும்பாபிஷக  திருப்பணிகள் பூஜையுடன் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் சரித்திர பிரசித்தி பெற்ற தாணுமாலயன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ராஜகோபுரத்தில் பழுதடைந்த சிலைகளை சீரமைத்து வண்ணம் பூசும் திருப்பணிகள் நேற்று யாக பூஜைகளுடன் தொடங்கியது. பூஜைக்கு பின்னர் தனியார் பங்களிப்புடன் 25 லட்ச ரூபாய் செலவில் ராஜகோபுரத்தில் உடைந்துள்ள சிற்பங்களை சீரமைக்கவும், வண்ணம் பூசவும் கோபுரத்தின் மேல் சாரம் போடும் பணிகளும் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story