சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
வெற்றியூர் அருகே சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், வெற்றியூர் அருகே உள்ள நாவல் கணியான்மடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கோயில் முன்னர் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, வேத விற்பன்னர்கள் புனித நீரை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வளம் வந்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். புனித நீர் கூடியிருந்த மக்களின் மேல் தெளிக்கப்பட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லல், காளையார்கோயில், அரண்மனைசிறுவயல், வெற்றியூர், காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கோபுர தரிசனம் செய்து சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story