செஞ்சி அருகே விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா !
விழுப்புரம்
அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம்,சோ்விளாகம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் ஸ்ரீபூரணி பொற்கலை சமேத ஸ்ரீஅய்யனாரப்பன் மற்றும் ஸ்ரீசப்தகன்னிகள், ஸ்ரீவீரபத்திரன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு விக்னேசுவர பூஜை, அனுக்ஞை, கோ பூஜை, கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றன.புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால பூஜைகள், கோ பூஜை, அஷ்ட திரவிய ஹோமம், விசேச மூலிகை ஹோமங்கள், மஹா பூா்ணாஹுதி, மஹா தீபாராதனை, யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றன.காலை 10 மணிக்கு ஸ்ரீபூரணி பொற்கலை சமேத ஸ்ரீஅய்யனாரப்பன் கோயில் கோபுர கலசம் மற்றும் ஸ்ரீசப்த கன்னிகள், வீரபத்திரன் கோயில் கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் சோ்விளாகம் ஊராட்சி மன்றத் தலைவா் சரோஜா சுப்பிரமணி, ஒன்றியக்குழு உறுப்பினா் சிலம்பரசி பாண்டியன், வல்லம் மத்திய ஒன்றிய திமுக செயலா் இளம்வழுதி உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Next Story