தலையாரியூரில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் கும்பாபிஷேகம்

தலையாரியூரில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் கும்பாபிஷேகம்

ஓமலூர் அருகே தலையாரியூரில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.


ஓமலூர் அருகே தலையாரியூரில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி ஊராட்சி தலையாரியூர் பகுதியில் ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. விழா கடந்த மாதம் 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆயிரம் குதிரை அண்ணமார் கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து யானை, குதிரை, பசுக்களுடன் பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் ஆயிரம் குதிரை அண்ணமாருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

Tags

Read MoreRead Less
Next Story