செல்லியாரம்மன், காலபைரவர் கோவிலில் கும்பாபிஷேகம்
சாத்தூர் அருகே உள்ள இறவார்பட்டி செல்லியாரம்மன், காலபைரவர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இறவார் பட்டியல் செல்லியாரம்மன் மற்றும் கால பைரவர்க்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதனையடுத்து அதிகாலை முதல் அம்மனுக்கு மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை ,மகாகணபதி ஹோமம், மூல மந்திரஜெபம், ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் அருகே உள்ள வைப்பாற்றில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் புனித நீர் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு யாகசாலையில் பூஜைக்கு வைக்கப்பட்ட அபிஷோகம் செய்யப்பட்டது. இதனையடுத்து அம்மனுக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை, செய்து தீபாரதனை, நடைபெற்றது. மேலும் கோவிலில் உள்ள விமானகலசத்திற்கும், செல்லியாரம்மன், காலபைரவர் , உள்ளிட்ட பைரவ மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் ,திருநீறு, உள்பட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் செல்லியாரம்மன், மற்றும் காலபைரவர் சிறப்பு அலங்காரம், செய்து சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. மேலும் சுற்றுவட்டாரத்தை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story