கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 அவ்வை நடுகுப்பத்தில் கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 

அவ்வை நடுகுப்பத்தில் கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வை நடுகுப்பத்தில் பிரசித்தி பெற்ற கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஒரு வருடமாகநடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி, ஸ்ரீநவகிரக ஹோமம், வாஸ்த்து சாந்தி, முதற்கால பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கோ-பூஜை, நாடி சந்தனம், 2-வது கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9.30 மணியளவில் யாசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு 9.45 மணியளவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் கோபுர கலசத்தின் மீதும் மற்றும் செல்வ விநாயகர், பாலமுருகன் உளிட்ட பரிவார மூர்திகளுக்கும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story