கொளப்பாடு ஆதியண்ணன் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

கொளப்பாடு  ஆதியண்ணன் சுவாமி ஆலய கும்பாபிஷேகம்

யாக சாலை பூஜை

நாகை மாவட்டம் கொளப்பாடு ஆதியண்ணன் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.

நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம்,கொளப்பாடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூர்ணாம்பிகா ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹர புத்ர மஹாசாஸ்தா அய்யனார், ஸ்ரீ ஆதியண்ணன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் எளிமையான முறையில் இருந்த ஆலயம் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது.

பூங்காவுக்கு நிகராக இயற்கை சூழலோடு மறு கட்டமைப்போடு புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேக விழா முதல் கால யாக சாலை பூஜையுடன் ஜூன்10 ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து நான்கு காலையாக பூஜைகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக நாளான இன்று காலை 10 முதல் 11.30க்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரைச் சேர்ந்த துரைராஜ்- பூரணி தம்பதியினர் குடும்பத்தார் செய்திருந்தனர்.இதில் கொளப்பாடு கிராமவாசிகள் ஆலய மருளாளிகள், பக்த கோடிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story