மஹா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பாபநாசம் வீர மஹா காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம் பேட்டை யில் வீர மஹா காளியம்மன் மகிஷா சூரவர்த்தினி கோவில் உள்ளது.இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. பின்னர் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிேஷகத்தையொட்டி யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வீர மஹா காளியம்மன், மகிஷா சூரவர்த்தினி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசத்தில் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்று தீபார்த்தனை காண்பிக்கப்பட்டு பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் 108 சிவாலயம் வங்காரம் பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story