செஞ்சி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலை வழுக்காம்பாறை பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு கோபுர கலசத்துக்கும், அதைத் தொடர்ந்து மூலவர் முத்துமாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்,
மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் ஜான் பாஷா, நகர செயலாளர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கும்பாபிஷேக நிகழ்வுகளை ஈஸ்வர சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர்.