நரசிங்கன்பேட்டை சித்தி விநாயகர், மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

நரசிங்கன்பேட்டை சித்தி விநாயகர், மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

நரசிங்கன்பேட்டை ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கன்பேட்டையில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் இம்மாரியம்மன் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று, முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து 2ம் தேதி இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று 3ம் தேதி 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹூதி தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story