ராம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
விழுப்புரம் அருகே ராம்பாக்கம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விநாயகர், சுப்பிரம ணியர், விஷ்ணு துர்க்கை, காத்தவராயன், பரசுராமர், நவக் கிரகங்கள், பூர்ண புஷ்கலை சமேத அய்யனாரப்பன், முத்தால் வீரன் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இந்த திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, 18-ந் தேதி காலை 2-ம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 3-ம் கால யாக பூஜை, தீபாராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து 7.30 மணிக்கு கலசம் புறப்பாடாகி புனிதநீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் முத்தாலம்மன், விநாய கர், சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை, அய்யனாரப்பன், முத்தால் வீரன், காத்தவராயன், பரசுராமர், நவக்கிரகங்கள் ஆகிய சன்னதி கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.