ஶ்ரீ பொன்னிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

ஶ்ரீ பொன்னிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

அரியலூர் அருகே 44 ஆண்டுகளுக்கு பிறகு ஶ்ரீ பொன்னிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள செதலவாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஶ்ரீ பொன்னிஞ்சி ஆண்டவர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா 44 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 01 ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜையுடன் தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் வார்க்கபட்டது.

பின்னர் புனிதநீரானது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பத்தில் புனிதநீர் ஊற்றபட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் ஶ்ரீ செம்மலையப்பா, ஶ்ரீ பாப்பாத்தியம்மன், ஶ்ரீ ஆகாச கருப்பு உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதணை நடைப்பெற்றது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதில் ஊர் முக்கியதஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story