அரசு மரத்தடி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

அரசு மரத்தடி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

அரசு மரத்தடி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

அரசு மரத்தடி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தியாகதுருகம் புக்கிலம் பஸ் நிறுத்தம் அருகே அரச மரத்தடியில் சித்தி விநாயகர், கிருஷ்ணர், ராகு, கேது ஆகிய சுவாமிகளுக்கு சிலை வைத்து 50 ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்து பொதுமக்களிடம் நிதி திரட்டி பணிகளை துவக்கினர். அரச மரத்தடியைச் சுற்றி புதிதாக மேடை கட்டப்பட்டு அதில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து 18ம் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு கடம் புறப்பாடாகி சாமியை வலம் வந்த பின்னர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story