திருக்கோவிலூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்கோவிலுார் மேல வீதியில் உள்ள பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. கடந்த 19ம் தேதி அங்குரார்பணம், பிரவேச பலி பூஜை, நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்வேஸ்வர பூஜை, கலச ஆவாஹனம், அக்னி பிரதிஷ்டை, மூல மந்திர ஹோமங்கள், கும்ப அலங்காரம், யாகசாலை ஹோமங்கள், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி காலை 8:30 மணிக்கு ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் முன்னிலையில் கோவில் கோபுர கலசம், மூலவர், உற்சவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபஷேகம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.
Next Story