மானாமதுரை அருகே ஊர்காவல் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

மானாமதுரை அருகே ஊர்காவல் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்கள்

மானாமதுரை அருகே ஊர்காவல் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள குவளைவேலி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஊர் காவல் சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ கோமாதா பூஜை, ஸ்ரீ மூல மந்திர ஜெய ஹோமம்,

காயத்ரி கோமம் மகாபூர்ணகதி சிறப்பாக நடைபெற்று கோவிலை சுற்றி கடம் புறப்பட்டு, அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஊர் காவலர் சுவாமி, ஸ்ரீ கற்பனை சுவாமி குதிரை மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கு கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் ஊர்காவல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. பின்னர் கோலவிழி கிராமத்தின் சார்பாக அன்னதானமும் நடைபெற்றது

Tags

Read MoreRead Less
Next Story