வளையல்காரன்புதூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, தெற்கு ரங்கநாதபுரம் கிராமத்தில், வளையல்காரன் புதூரில் உள்ள அண்ணா நகரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாம்பாளம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ முனியப்பன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்கள் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா அதிகாலையில் மங்கள இசை உடன் துவங்கியது.
பிறகு வேத பாராயணம், திருமுறை பாராயணம், தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி, மஹா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று, கோவில் விமானம் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேக விழாவை, வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். பின்னர் கோவில் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்