"காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம் விழா"
காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தோப்புத் தெருவில், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தோப்புத் தெருவில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா ஜன.,20ம் தேதி அன்று, வெகுவிமரிசையாக துவங்கியது. நேற்று, காலை கலசப் புறப்பாடு நடந்தது. காலை, 9:50 மணிக்கு விமானத்தின் மீது, சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை இந்திரா நகரில், பவானி அம்மன் கோவில் உள்ளது. நேற்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு கலசப் புறப்பாடு, காலை 9:25 மணி அளவில் விமானத்தின் மீது, சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில், பூதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில், காலை 10:45 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, உக்கல் கிராமம், மடாவளம் பகுதியில் காமாட்சி அம்பாள் கோவில் உள்ளது. புதிய மூன்று ராஜகோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அதன் கும்பாபிஷேக விழா நேற்று, காலை 10:30 மணி அளவில் வெகுவிமரிசையாக நடந்தது."