2.5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 1290 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்

2.5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 1290 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்

பொதுக்கூட்டம் 

2.5 ஆண்டு கால திமுக ஆட்சியில் 1290 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 2500 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.கோவில் நிலங்களை மீட்டெடுத்து கோவிலிடம் ஒப்படைத்தது திமுக ஆட்சி காலத்தில் தான். திமுக இந்து மதத்தின் விரோதி இல்லை என திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் தமிழக முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வ கணபதி தலைமையில் நடைபெற்றது.

எடப்பாடியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்று பேசினார் அதில் இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் 1290 இந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியது திமுக ஆட்சிக் காலத்தில் எனவும் கோவிலுக்கு சொந்தமான 690 ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து மீட்டு 2500 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்டெடுத்து கோவிலிடம் ஒப்படைத்தது திமுக ஆட்சி காலத்தில் தான் எனவே இந்து மதத்தின் விரோதி திமுக இல்லை என பேசினார். இக்கூட்டத்தில் எடப்பாடி தொகுதி தேர்தல் பார்வையாளர் பரணி மணி, எடப்பாடி நகர செயலாளர் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார் கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், எடப்பாடி ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, உட்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story