காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம்

  காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூரில், நுாற்றாண்டை கடந்த அருணாசலேஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை, கிராமத்தினர், அறங்காவலர், விழாக்குழு சார்பில், சமீபத்தில் சற்று பெரிய அளவில் புதுப்பித்து கட்டினர்.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன், யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 9:25 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை 9:40 மணிக்கு கோவில் கோபுர விமான கலசம், பரிவாரங்களுக்கும், மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பினர், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றவர்களுக்கு பழ வகை மற்றும் நிழல்தரும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கினர். காஞ்சிபுரம் தாயார் குளம் தெருவில் உள்ள செல்வஜோதி விநாயகர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள், திருப்பணி குழுவினர், தாயார்குளம் தெருவினர் முடிவு செய்தனர்.

அதன்படி, பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, 34 ஆண்டுகளுக்குப்பின் நேற்று, காலை 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் பல்லவர்மேடு கிழக்கு பகுதி, அன்னை சத்யா நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக விநாயகர், பாலமுருகர், தட்சிணாமூர்த்தி, வாராஹி அம்மன், துர்கை அம்மன், பக்த ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இரவு 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா நடந்தது.

Tags

Next Story