அணைக்கரை கோட்டாலம் முனியப்பர் கோவில் கும்பாபிஷேகம்

அணைக்கரை கோட்டாலம் முனியப்பர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கள்ளகுறிச்சி மாவட்டம், அணைக்கரை கோட்டாலம் முனியப்பர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அணைக்கரைகோட்டாலம் முனியப்பர் கோவில் கும்பாப்சிஷேகம் நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் வாஸ்துசாந்தி பிரவேசம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், கலச ஆவாகனம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு கலச புறப்பாடுக்கு பின் வாழ்முனியப்பன், செம்முனியப்பன், வளர்ந்த ஜெடாமுனியப்பன், காளியம்மன், பச்சையம்மன், பார்ப்பாள், பாப்பாத்தி, குறவ குறத்தி, சப்த கன்னிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

இதில் எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., உதயசூரியன், அ.தி.மு.க., செந்தில்குமார், ஒன்றிய சேர்மன் அலமேலுஆறுமுகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மகாதீபாரதனைக்கு பின் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story