ஈசநத்தம் கோட்டையூரில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

ஈசநத்தம் கோட்டையூரில் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஈசநத்தம் கோட்டையூரில் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் கோட்டையூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார் , ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தும்பிக்கையாழ்வார் மற்றும் துவார பாலகர்கள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை விஸ்வாக்ஷேன ஆராதனம், மங்கள இசை, அனுக்ஞை புண்ய ஹவாஜனம், சூரிய பூஜை, வேதிகை, ஆவாகனம் அக்னி ஜெனனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாக பூஜையில் வேத பாராயணம் மூல மாலா மந்திர ஹோமங்கள் பிராயசித்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் நடைபெற்று, மஹா பூர்ணாகுதி, தீபாதாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று, யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அறங்காவலர் ஜெயராம் தலைமையிலான கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள், கோவில் வழிபாடுதாரர்கள் மன்றம் சார்பில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story