கும்பாபிஷேக விழா நிறைவு - மார்க்கெட் இன்று முதல் மீண்டும் துவக்கம்

கும்பாபிஷேக விழா நிறைவு  - மார்க்கெட் இன்று முதல் மீண்டும் துவக்கம்

 முத்து முனியப்பன் சுவாமி

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் முத்து முனியப்பன் சுவாமி கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து மேள, தாளங்கள் முழங்க மஞ்சள் ஆடை அணிந்தவாறு பெண்கள் ஏராளமான பேர் தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 09:00 மணியளவில் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. யாகசாலை பூஜைகளை பவானி பிரபாகரசிவம் மற்றும் குழுவினர் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மார்க்கெட் சங்க தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் விஸ்வநாதன், சீனிவாசன், சீனி, ரங்கசாமி, சக்கரபாணி, உள்பட பலர் செய்தனர். இந்த விழாவையொட்டி இரு நாட்கள் காய்கறி மார்க்கெட் விடுமுறை விடப்பட்டது. விழா நிறைவு பெற்றதால், மார்க்கெட் வழக்கம்போல் இன்றுமுதல் செயல்படும் என நிர்வாகிகள் கூறினர்

Tags

Next Story