ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

செய்யாறு அருகே உக்கல் மடாவளம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அமைந்துள்ளத உக்கல் கிராமம். காஞ்சிபுரம் வந்தவாசி செல்லும் சாலையில் உக்கல் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 40 சதுரஅடி கோயிலாக சிறிய கர்ப்பகிரகத்தில் அருள் பாலித்து வந்தார். தற்போது 72 அடி கிழக்கு ராஜகோபுரம் 73 அடி வடக்கு ராஜகோபுரம் உள்பிரகார மகா மண்டபம், வெளிப்பிரகார மகா மண்டபம் அம்பாள் சன்னதி சந்திரமவுலீஸ்வரர் குரு சன்னதி, பைரவர், மகாலட்சுமி, தன்வந்திரி, விநாயகர் மற்றும் முருகன் ஆகிய பரிவார மூர்த்திகளோடு மிக பிரம்மாண்டமாக காமாட்சி அம்பாள் திருக்கோயில் புனராவர்த்தனம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஆலய நிர்வாகம் செய்ய நவகுண்ட பக்ஷ யாகசாலை அமைத்து ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு ஏக குண்ட பட்சம் எனும் 23 குண்டங்கள் யாகசாலை பூஜைகளை சிவ ஆகம முறைப்படி சிவாச்சாரியார் வேதம் முழங்க நடைபெற்றது. முன்னதாக 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கஜ பூஜை கோ பூஜை விக்னேஸ்வர பூஜை அஷ்டலஷ்மி ஹோமம் நவக ஹோமம் பூர்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. 22 ஆம் தேதி ரக்ஷாபந்தனன் கும்ப அலங்காரம் மண்டப ஆராதனை யாகசாலை பிரவேசம் முதல் கால யாக பூஜை ஆன்மிக சொற்பொழிவும் 23ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை மற்றும் 24 ஆம் தேதி கஜ பூஜை கோ பூஜை உடன் திரவிய பூஜைகள் ஆரம்பித்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Tags

Next Story