அரவக்குறிச்சியில் மூன்று கோவிலில் கும்பாபிஷேக விழா !

அரவக்குறிச்சியில் மூன்று கோவிலில் கும்பாபிஷேக விழா !

கும்பாபிஷேக விழா

அருள்மிகு செல்வ விநாயகர், பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அருள்மிகு செல்வ விநாயகர், பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கொடையூர் கிராமத்தில் உள்ள கே. வெங்கடாபுரத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை மங்கள வாத்தியத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகவேள்வி நடைபெற்றது. இந்த யாக வேள்வியில் புனித நீர் பூஜிக்கப்பட்டு, வேத மந்திரங்களை முழங்கி,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பங்காளிகள் புனித நீரை சுமந்து கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, பின்னர் கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகளை நடத்தி, புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story