கன்னிமார், ஸ்ரீ  கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது

பள்ளிபாளையம்  அருகே ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ  கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எலந்தகுட்டை, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழா பிப். 10ல் கணபதி பூஜையுடன் துவங்கியது. அதே நாள் காவிரி ஆற்றிலிருந்து மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து பங்கேற்றனர். மாலையில் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 09:30 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை எலந்தகுட்டை வெங்கடேச கணேஷ் சிவம், விஜய் கிருஷ்ணசிவம் குழுவினர் நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story