சோமேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய விழா



சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய விழா நடந்தது.
சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய விழா நடந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி மலை அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பரிவார தெய்வங்களுக்கு பிம்ப பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையொட்டி முதல் கால பூஜையாக மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து இரண்டாம் கால பூஜையாக நடைபெற்று பிம்ப கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாட்டை இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் சங்கரன் ,சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் தங்கமுத்து, மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இவ்விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story



