குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

மகா கும்பாபிஷேகம்

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் செங்கமா முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கி, சுவாமிகளுக்கு கண் திறப்பு வைபவம் நடந்தது. மலைப்பாளையம் விநாயகர் கோவிலிலிருந்து முளைப்பாரி அழைத்தல் வைபவம், முதல் கால யாக சாலை பூஜை துவங்கிய நிலையில், யாக சாலை பூஜைகள் நான்கு கட்டங்களாக நடைபெற்றன. நேற்று காலை 08:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கோபுர கலசங்கள் மேல் ஊற்றினார்கள். கலசங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. கோவிலை சுற்றி நின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, முனியப்பன் கோவில் வழியாக செல்லும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொல்லப்பட்டி பிரிவு சாலை முதல் பல்லக்காபாளையம் நுழைவுப்பகுதி வரை இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் அதிகம் இருந்ததால் போக்குவரத்து போலீசார், வாகன போக்குவரத்து சீர் செய்தனர்.

Tags

Next Story