கந்தசாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா

கந்தசாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம், நாமக்கல் எல்லைக்குட்பட்ட பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினார். முன்னதாக முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பின்னர் மகாதீபாராதனை நடந்தது. இவ் விழாவிற்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story