சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்ப ஆசிரமத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள சாஸ்தா நகர் ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தின் முதல் நாளான 15 ஆம் தேதி கணபதி ஹோமம் உஷா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பிரதிஷ்ட ஹோமம் கலசாபிஷேகம் தியானதி வாசம் ஜீவ கலச பூஜை ஜீவோத் வாசனம அலங்காரம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. தொடர்ந்து 16ஆம் தேதியான இன்று காலை ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டா பூஜையும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு கேரள தாந்திரீக முறைப்படி சன்னிதானத்தின் முன் கேரள முறைப்படி சிறப்பு யாகமும் கலச பூஜையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கலசத்தை தலையில் சுமந்தபடி திருக்கோவிலை சுற்றி வந்து அஷ்ட பந்தன பிம்ப பிரதிஷ்டை உள்ளிட்டவைகள் நடைபெற்றன பின்னர் ஆகாய கலசத்திற்கு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கலசத்தின் மீது தண்ணீர் ஊற்றும் போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று விண்ணை மட்டும் அளவிற்கு கோஷங்கள் எழுப்பினர் டிரோன் மூலமாக கலசத்திற்கு பூக்களும் பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் உள்ள கணபதி முருகன் அம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் ஐயப்பனுக்கு கேரள முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.