சாமல்பட்டி கிராமத்தில் கும்பாபிஷேக விழா

சாமல்பட்டி கிராமத்தில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

சாமல்பட்டி கிராமத்தில் நடைபெற்ற செல்வ விநாயகர், மாரியம்மன் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி கிராமத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம் பூசி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, நாகராஜ் சிவாச்சாரியார், குழுவினரால், 108 கலசம் வைத்து, விநாயகர் பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, நாடி சந்தனம், உள்ளிட்ட 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டன.

பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து, மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள். அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். இவ்விழாவில் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

Tags

Next Story