ஆத்துக்காடு வடக்கு சூழ பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
நத்தம் அடுத்துள்ள கரந்தமலையில் உள்ள வலசை கிராமத்தில் ஆத்துக்காடு வடக்கு சூழ பிடாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அடுத்துள்ள சேத்தூர் ஊராட்சி கரந்தமலையில் உள்ள வலசை கிராமத்தில் ஆத்துக்காடு வடக்கு சூழ பிடாரி அம்மன் கோயில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதில் கணபதி ஹோமம் நவகிரகபூஜை, விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்தது.
பின்னர் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தில் ஊற்றப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story