கும்பகோணம்:டிச.20ல் அளவிலான தபால் சேவை - ஓய்வூதியதாரர் குறைதீர் முகாம்

கும்பகோணம்:டிச.20ல் அளவிலான தபால் சேவை - ஓய்வூதியதாரர் குறைதீர் முகாம்
அஞ்சல் குறைதீர் கூட்டம்
கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கும்பசுவாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கும்பகோணம் கோட்ட அளவிலான அஞ்சல்சேவை மற்றும் ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு முகாம் கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 20-ஆம் தேதி நடக்கிறது. இந்த முகாமில் நேரில் மற்றும் தபால் மூலம் புகார்கள் தெரிவிக்கலாம். தபாலில் புகார்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15-ஆம்தேதி. தபால் கவரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவரின் பெயர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீதுஎண், பணவிடை (மணி யார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்கவேண்டும். புகாரானது சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும். புகார் குறித்த தபால்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கும்பகோணம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது அஞ்சல்சேவை மற்றும் ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு முகாம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story