பச்சை காளி, பவளக்காளி திருநடன வீதியுலா
கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ பாலக்காட்டு காளியம்மன் ஆலயத்தில் பங்குனி வஸந்த பாலாபிஷேக ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம், அதுபோல இவ்வாண்டு 65 ஆம் ஆண்டு பாலாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான கடந்த 22 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், சக்தி கரகம், வேல், அலகு காவடி, அக்கினி கொப்பரையுடன் வீதியுலா வந்து ஸ்ரீ முனீஸ்வரனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று ஸ்ரீ பச்சைக்காளி, ஸ்ரீ பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா சென்று வருகிற 30 ஆம் தேதி ஆலயம் வந்து அமர்தல் அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், நடைபெறுகிறது. வருகிற 1 ஆம் தேதி அன்னதானமும், வருகிற 4 ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான இவ்விழாவை நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.