கும்பகோணம் சுந்தர மகா காளியம்மன் கோவில் விழா
பச்சைக்காளி பவளக்காளி திருவீதியுலா
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் அமைந்துள்ள சுந்தர மகாகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரமோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கடந்த 17ம் தேதி மகா சக்தி வாய்ந்த வேல் புறப்பாடும், 19ம் தேதி பச்சைக்காளி பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், பிறந்த வீட்டுக்கு செல்லும் நிகழ்வு, மாநகர்வல காட்சிகள் நடைபெற்றது. பின்னர் 20ம் தேதி காவிரி ராயர் படித்துறையிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரைடன் பச்சைக்காளி பவளக்காளி வீதியுலா நடைபெற்றது.தொடர்ந்து விழா நிறைவாக பச்சைக்காளி பவளக்காளி ஆலயம் திரும்புதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் அருகே நிரம்பி வீதி உலா வந்த காளியம்மன்களை நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க மலர் தூவி வரவேற்க ஆலயம் அமர்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நேற்று விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான வைகாசி பிர்மோத்ஸவம் நிறைவுபெறுகிறது.