மாசான சுவாமி கோவிலில் கும்ப கலசங்கள் திருட்டு 

மாசான சுவாமி கோவிலில் கும்ப கலசங்கள் திருட்டு 
X
கோவிலில் கும்பகலசங்கள் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், ஆமணக்கன் விளையில் மாசான சுவாமி கோயிலில் கும்பக்கலசங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே ஆமணக்கன் விளை யில் மாசான சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மூன்று கும்பக்கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 30ஆம் தேதி பூஜை முடிந்து கோவிலை பூட்டி விட்டு சென்றனர். மீண்டும் நேற்று கோயில் நிர்வாகி வட்டகோட்டை சேர்ந்த கணேசன் (59) என்பவர் கோயிலுக்கு வந்தார்.

அப்போது கோயில் கருவறையில் மேல் பகுதியில் இருந்த மூன்று கும்பகலசங்களில் இரண்டு கும்ப கலசங்கள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கணேசன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த திருட்டு சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story