முத்து மாரியம்மன் கோவிலில் கும்மிப் பாட்டு நிகழ்ச்சி
தென்காசி அருகே முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கும்மிப் பாட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 8 நாட்கள் சித்திரை கொடை விழா நடைபெறும். இதேபோன்று இந்த ஆண்டிற்கான கொடை விழா நேற்று கால் நாட்டுடன் துவங்கியது கொடை விழாவில் 2ம் நாளான நேற்று 17ம் தேதி இரவு காப்பு கட்டி விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலில் கும்மி பாட்டு பாடி அம்மனை குளிர்வித்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story