இடிந்து விழும் நிலையில் குன்றக்குடி அடிகளார் மணிமண்டப சுவர்

இடிந்து விழும் நிலையில் குன்றக்குடி அடிகளார்  மணிமண்டப சுவர்

இடிந்து விழும் நிலையில் உள்ள மேல் சுவர் 

குன்றக்குடி அடிகளார் மணிமண்டப மேல் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்றக்குடியில் ரூ.28.57 லட்சம் மதிப்பீட்டில் குன்றக்குடி அடிகளாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி மணி மண்டபத்தை திறந்து வைத்தார். ரூ.3.5 லட்சம் செலவில் அடிகளார் சிலை தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிகளார் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் அடங்கிய நுாலகமும் மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குன்றக்குடி அடிகளாரின் பிறந்த நாளான ஜூலை 11 அன்று மணிமண்டபத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொள்வர். இந்நிலையில் மணிமண்டபத்தின் மேற்சுவர் பல மாதங்களாக இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. கோயில் தெப்பக்குளத்திற்கு செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story