குறிஞ்சிப்பாடியில் பிள்ளையார் திருவீதியுலா
பிள்ளையார்
குறிஞ்சிப்பாடி அருகே செங்குந்தம் பிள்ளையார் கோவிலில் தமிழ் வருட பிறப்பையொட்டி நடந்த திருவீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு செங்குந்தம் பிள்ளையார் திருக்கோவிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு புதியதாக செய்யப்பட்ட மூஷிக வாகனத்தில் பிள்ளையார் வீதி உலா காட்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story