நாமக்கல்லில் குருத்தோலை பவனி, சிறப்பு பிரார்த்தனை!

நாமக்கல் துறையூா் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் அருட்சகோதரா்கள் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நாமக்கல்லில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவா்கள் சிலுவை வடிவிலான குருத்தோலையை சுமந்தபடி, ஆலய வளாகத்தில் ஊா்வலமாக சென்றனா். சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுபிரானை தங்களுடைய கடவுளாக ஏற்றுக் கொண்ட இஸ்ரேல் மக்கள், தங்கள் கைகளிலே தென்னங்கீற்று ஏந்தியபடி ஜெருசலம் நகரில் ஊா்வலமாக சென்றனா். அந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனைவரும் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடி வருகின்றனா்.அதன்படி நாமக்கல் துறையூா் சாலையில் அமைந்துள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் அருட்சகோதரா்கள் தலைமையில் குருத்தோலை ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலம் தேர்தல் நடத்த விதிமுறைகள் காரணமாக கிறிஸ்து அரசர் ஆலய வளாகத்தில் ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் தென்னங்கீற்றை சுமந்தபடி ஊா்வலம் வந்தனா்.

Tags

Next Story