திரு இருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு

திரு இருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு

குருத்தோலை ஞாயிறு

தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தவக்காலத்தின் உச்சக்கட்டமாகவும், புனித வாரத்தின் தொடக்கமாகவும் அமையும் நாளைதான் குருத்து ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் இயேசு கிறிஸ்துவுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு பவனியை நினைவுகூரும் வகையில் உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் குருத்து ஞாயிறைக் கொண்டாடி வருகின்றனர். இதன்படி, தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வியாகுல அன்னை ஆலயத்தில் புனித சவேரியார் தொழிற் பயிற்சிப் பள்ளித் தாளாளர் சூசைமாணிக்கம் அடிகளார் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, குருத்தோலைகள் புனிதம் செய்யப்பட்டு, தஞ்சாவூர் மறை மாவட்ட பரிபாலகர் எல். சகாயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. பின்னர் பேராலயத்தில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில், பேராலய பங்குத்தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார், உதவிப் பங்குத்தந்தை ஏ. பிரவீன், திருத்தொண்டர் ஏ. அன்புராஜா, ஆயரின் செயலர் ஆன்ரு செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story