குஷ்பு உருவ பொம்மை எரிப்பு

குஷ்பு உருவ பொம்மை எரிப்பு

குஷ்பு உருவபொம்மை எரிப்பு 

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் உரிமை தொகைப்பற்றி சர்ச்சை கருத்தை கூறிய குஷ்பு உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பா.ஜ.,வை சேர்ந்த நடிகை குஷ்பு, தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகையை பிச்சை என்று கூறியதை கண்டித்து, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், அந்தியூர் பேருந்து நிலையம் முன், அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி தலைவியும், பேரூராட்சி தலைவியுமான பாண்டியம்மாள், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story