குட்டி ஆண்டவர் கோவில் புரவி எடுப்பு விழா!

அரிமளம் அருகே வம்பரம்பட்டி குட்டி ஆண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு விழா விமரிசையாக நடந்தது.

அரிமளம் அருகே வம்பரம் பட்டி அருள்மிகு ஸ்ரீ குட்டி ஆண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சியாக நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள பம்பரம் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குட்டியாண்டவர் கோவில் புரவி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நொண்டிக்கருப்பர் திடலில் இருந்து சுடு மண்ணால் செய்யப்பட்ட புரவி மண் சிலை,காளை மாடு மண் சிலை,மதலை சிலையானது வரிசையில் நிருத்தப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்டு பின்பு அங்கிருந்து வான வேடிக்கையோடு மேல தாளம் முழங்க சாமி ஆட்டத்துடன் தோலின் மீது சுமந்தவாரு அங்கிருந்து சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று குட்டி ஆண்டவர் கோவில் நோக்கி சென்றடைந்தனர்.

மேலும் அங்கு குட்டியாண்டவர் கோவிலில் அய்யணார் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்பு பரிவார தெய்வங்களான சின்ன கருப்பு,பெரிய கருப்பு,நொண்டிக் கருப்பு,சண்ணாசி உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆராதணை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தைச் சார்ந்தஏராளமானபொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story