குவான் கி டோ போட்டி- சாதனை மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை!
குவான் கி டோ போட்டி
பதக்கம் வென்ற மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை.
கோவை:தேசிய அளவிலான குவான் கி டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்ற கோவை மாணவர்கள் வரவிருக்கும் உலக அளவிலான போட்டிகளுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தேசிய அளவிலான ஐந்தாவது குவான் கி டோ சாம்பியன் சிப் போட்டிகள் நடைபெற்றது.இதில் 20 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்தில்இருந்து 25 மாணவர்களும் இதில் கோவை மாவட்டத்தில் இருந்து மட்டும் ஏழு மாணவர்கள் கலந்து கொண்டு மொத்தம் 20 தங்கம் வெள்ளி வெண்கல பதக்கங்கள் ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளனர். அதில் இரண்டு பேர் கோவை அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். மேலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்கள் மொரோக்கோவில் ஏப்ரல் மாதம் உலக அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.பதக்கங்களை வென்று திரும்பிய கோவை மாணவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இது குறித்து பேசிய அரசு பள்ளி மாணவி இன்ஷிகா மொரோக்கோ நடைபெறும் போட்டிக்கு செல்லும் தங்களுக்கு தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
Next Story