கிர்கிஸ்தான் வன்முறை : இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - விஜய் வசந்த் எம்பி

கிர்கிஸ்தான் வன்முறை : இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - விஜய் வசந்த் எம்பி
X

விஜய் வசந்த் எம்பி

கிர்கிஸ்தான் நாட்டில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விஜய் வசந்த் எம்பி தெரிவித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஏராளமான இந்திய மாணவர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலின் எதிரொலியாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் பரவின.

கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து விசாரித்தேன். இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவர்களின் நலன் உறுதி செய்யப்படும் என தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து மாணவர்களின் பாதுகாப்பை இந்திய தூதரகம் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என விஜய்வசந்த், எம்.பி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags

Next Story