நடைமுறையை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொழிலாளர் ஆணையம் நடவடிக்கை
ஆட்சியர் அலுவலகம்
கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 137 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாக தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை: தேசிய விடுமுறை தினத்தன்று விடுமுறை அளிக்காமலும் பணிபுரிய அனுமதிக்கபட்டவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கபடுகிறதா? என்பது குறித்து தொழிலாளர் ஆணையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளபட்டது.கோவை மாவட்ட உதவி ஆணையர் அமலாக்கம் மற்றும் பாலதண்டாயுதம் தலைமையில் 173 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளபட்டது.இதில் விடுமுறை அளிக்காமலும் ஆய்வாளருக்கு உரிய முன்னறிவிப்பு அளிக்காமல் பணிபுரிய அனுமதித்த அறுபத்தி எட்டு கடைகள் 69 உணவகங்கள் என 137 நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டதாக தொழிலாளர் ஆணைய அலுவலக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story