மக்காச்சோளம் அறுவடை செய்து காயவைக்கும் பணி தீவிரம்

மக்காச்சோளம் அறுவடை செய்து காயவைக்கும் பணி தீவிரம்
மக்காச்சோளம் காய வைக்கும் பணி
மக்காச்சோளம் அறுவடை செய்து காயவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதே போல் வாழை, மக்காச்சோளம், கடலை, எள் ஆகியவை பயிரிடப்படுகிறது. தஞ்சையை அடுத்த வல்லம், திருக்கானூர்பட்டி, குருவாடிப்பட்டி பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு போதுமானது என்பதால் இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றன. கோழி தீவனத்திற்கு மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலர வைக்க உலர் கலம் இல்லாததால், சாலையில் மக்காச்சோளத்தை விவசாயிகள் காய வைக்கின்றனர். தற்போது மேகமூட்டமாக காணப்படுவதால் காய வைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மக்காச் சோளத்தை காய வைக்கும் பணியில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களுக்கான கூலி ரூபாய் 2,500 முதல் 3,000 வரை தேவைப்படுகிறது என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது ஒரு குவிண்டால் மக்காச்சோளம் 2,350 என்ற விலையில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மக்காச்சோளத்தை அரசு கொள்முதல் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story