மனைவியுடன் கருத்து வேறுபாடு -தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் கருத்து வேறுபாடு -தொழிலாளி தற்கொலை

தற்கொலை

திருச்சியில் மனைவியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் ஸ்ரீரங்கம் (சென்னை) ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், இறந்தவா் அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகுக் கடை தெருவைச் சோ்ந்த பிச்சை மகன் ஷாஜகான் (37) என்பது தெரிய வந்தது. கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால் செவ்வாய்க்கிழமை காலை இருமுறை அவா் அருகில் இருந்த தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். அவரை மீட்டு உறவினா்கள் கயிற்றால் கட்டி வைத்துள்ளனா். ஆனால் அவா் கயிற்றை அறுத்துக் கொண்டு, அந்த வழியாக சென்ற தேஜஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

ரயில்வே போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story