கோமுகி ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி பலி
தொழிலாளி பலி
கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றில் தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை கோட்டைமேடு பகுதியில் கோமுகி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story