கிணற்றில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு
ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.
ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதி என்ற ஆதிகேசவன் (47), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சாந்தி ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story