மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

பைல் படம்

திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி, உமா மகேஸ்வரி தெருவில் வீடு கட்டிவருபவர் ஜோனதாஸ் மகன் அருளப்பன், 37; நேற்று இவரது வீட்டின் மாடியில் சாரம் கட்டும் பணி நடந்து வந்தது. தகடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஏழுமலை, 38; பணியில் ஈடுபட்டிருந்தார். மதியம் ஒரு மணி அளவில் வீட்டுக்கு மேலே சென்ற மின் ஒயர் உரசியதால் மின்சாரம் தாக்கி ஏழுமலை காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி உதயா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story